பாட்னா

ற்போது நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.    அரசின் டிஜிட்டல் மயமாக்கல் முறையினால் மின்னணு பொருட்களின் குறிப்பாக ஹார்ட்வேர் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.    இது குறித்து டிசிஎஸ் நிறுவனம் சார்பில் பாட்னாவில் ஒரு விழா நடந்தது.

அதில் பேசிய மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “பீகார் மாநிலத்தில் பல கிராமங்கண் டிஜிட்டல் மயமாக்கபட்டுள்ளது.  இதனல் பீகார் மாநிலம் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது..    நாடு முழுவதிலும்  உள்ள 120 நகரங்களில் மொத்தம் 297 ஐ டி மற்றும் வர்த்தக சேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த தொழில்கள் மேலும் வளரும் என நான் நம்புகிறேன்.   நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு ஹார்ட்வேர் பொருட்கள் உற்பத்தியின் மதிப்பு ரூ.1.90 லட்சம் கோடியில் இருந்து ரூ.4.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.