
சென்னை :
மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 % ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் காரணமாக 90 ஆயிரம் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும் ஒப்பந்தப்படி, களப்பிரிவில் 2,000 மின்பாதை ஆய்வாளர்கள், 50 சிறப்புநிலை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்கழகத் தலைவர் சாய்குமார் முன்னிலையில் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
கடந்த 16-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்த நிலையில், ஊதிய உயர்வு குறித்து கடந்த 20ந்தேதி அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஊதிய உயர்வு குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
Patrikai.com official YouTube Channel