மத்திய அரசின் மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.

கடந்த 10 வருடங்களில் தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ. 12647 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது
இதனால், ஏற்கனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]மின் கட்டணம் உயர்வு எப்போது அமலுக்கு வரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…