சென்னை: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது . மேலும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி மற்றும் சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது/
அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும்.
மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (09420) நாளை முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.