டில்லி
தேர்தல் நிதி பத்திரங்கள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் ரூ.1716 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்து வருகிறது. கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிப்பவர்கள் தொகைக்கு பதில் இந்த பத்திரங்களை கட்சிகளுக்கு அளிக்கலாம். கட்சிகள் இந்த பத்திரங்களை தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் அமுல்படுத்தப் பட்டது.
இதன் மூலம் கட்சிகளுக்கு தனியார் மற்றும் கார்பரேட் அளிக்கும் நிதி குறித்து வெளிப்படையாக தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. புனே நகரை சேர்ந்த விகார் துர்வே என்னும் ஆர்வலர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடந்த 2018 மற்றும் இந்த வருடம் இதுவரை விற்கப்பட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தார்.
இதற்கு வங்கி நிர்வாகம் அளித்த பதிலில், “கடந்த 2018 ஆம் வருடம் இந்த பத்திரங்கள் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை, அக்டோபர், நவம்பர் என ஆறுசுற்றுகளாக விற்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுக்களில் மொத்தம் ரூ.1056.73 கோடிக்கு பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி, மார்ச் என இரு சுற்றுக்களில் ரூ.1716.05 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளன.
இந்த பத்திரங்கள் மும்பை நகரில் 2018 ஆம் வருடம் ரூ.382.70 கோடிக்கும் 2019ஆம் வருடம் 495.60 கோடிக்கும் விற்பனை ஆகி உள்ளன. அதைப் போல் தலைநகர் மும்பையில் 2018 ஆம் வருடம் ரூ. 147.06 கோடிக்கு விற்பனையாகிய நிலையில் 2019 ஆம் வருடம் ரூ.20.5.92 கோடி விற்பனை ஆகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.