சென்னை:
ஞ்சாவூர் தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜனும் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிக அளவில் பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்தது. ஆனால் மீண்டும் பணப்பட்டுவாடா புகார்கள் வந்ததின் பேரில் தேர்தலையே ரத்து செய்தது.
மேலும்,  திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் உடல்நலக் குறைவால் காலமானார்.  எம்.எல்.ஏ. பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அவர்  இறந்த காரணத்தால்  திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
sasi
ஆகவே காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான தேர்தல் தேசி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசியல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் சசிகலா போட்டியிடலாம் என உறுதிப்படாத தகவல் வெளியானது.
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அதன் காரணமாக,  சசிகலாவை சட்டமன்ற உறுப்பினராக்கி, அதிமுக தலைமை பதவிக்கு அமர்த்த ஜெ. முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. மேலும் சசிகலாவை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கவும் மறைமுக வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
senthil-balaji
இதன் காரணமாக அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி விடலாம் என சசிகலா அன்ட் குரூப்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
இதன் காரணமாக நடைபெற உள்ள தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் சசிகலா நடராஜன் களம் இறக்கப்படுவார் என நம்பப்படுகிறது. இல்லையில், அவருக்கு மாற்றாக, அதிமுக ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியே மீண்டும் களம் இறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் தாம் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதில் செந்தில்பாலாஜி மும்முரமாக இருக்கிறார்.
மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த சீனிவேல் குடும்பத்தினர் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தெரிகிறது.
அதேபோல் திமுக சார்பிலும் வேட்பாளர்கள் குறித்து பரபரப்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.