டில்லி
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செய்யும் செலவின் வரம்பை தேர்தல் ஆணையம் 10% அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு வரம்பைத் தேர்தல் ஆணையம் நிர்ணயித் இருந்தது. அதாவது மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிக பட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். இதைப் போல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம்.
இந்த உச்சவரம்பை அதிகரிக்கக் கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வேட்பாளரின் செலவுக்கான வரம்பை 10% வரை அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது
”அதன்படி இனி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.77 வரை செலவு செய்யலாம். அதைப் போல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.30 லட்சம் வரை செலவு செய்யலாம்.” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.