2024-25 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் பாஜக அதிக பணத்தை செலவிட்டுள்ளது, இது 2019 – 20ஐக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகம். தவிர, காங்கிரஸை விட 3.75 மடங்கு அதிகம் செலவிட்டுள்ளது.

பாஜக ₹3,335.36 கோடியும், காங்கிரஸ் ₹896.22 கோடியும் செலவிட்டது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் மக்களவை மற்றும் எட்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களின் போது, பாஜக மொத்தம் ₹6,769.14 கோடியை வசூலித்தது. இதில், ₹6,124.85 கோடியை நன்கொடையாகப் பெற்றது.
இதில், தேர்தல் செலவுகளுக்கு ₹3,335.36 கோடி உட்பட மொத்தம் ₹3,774.58 கோடியை செலவிட்டது. சேமிப்பு ₹2,994.56 கோடி.
ஒப்பிடுகையில், 2024-25 ஆம் ஆண்டில் காங்கிரஸின் வருமானம் ₹918.28 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் அதன் மொத்த செலவு ₹1,111.94 கோடி.
பாஜக கட்சி விளம்பரங்களுக்கு ₹897.42 கோடியையும், தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு ₹583.08 கோடியையும், வேட்பாளர்களுக்கு நிதி உதவிக்காக ₹312.90 கோடியையும் வழங்கியது.
பாஜக தனது ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக ₹69.07 கோடியையும், ஊழியர் நலத் திட்டங்களுக்கு ₹5.27 கோடியையும் சேர்த்து மொத்தம் ₹74.34 கோடியை செலவிட்டது.
[youtube-feed feed=1]