டில்லி:
17வது நாடாளுமன்றத்தை கட்டமைக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் பாஜகவே ஆட்சி கட்டிலில் அமரும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நாளை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி வந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கும், ஸ்மிருதி இராணிக்கும் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
மக்களின் முடிவை ஏற்பதாக கூறிய அவர், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தினால், அதனை ஏற்கவும் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தோல்வி குறித்து காரசாரமாக விவாதம் நடைபெறும் என தெரிகிறது.