சென்னை:
தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுயுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் யாரும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பாக எந்தவித பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.
மீறி செய்திகளோ, விளம்பரங்களோ பதிவிட்டால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் கால அட்டவணை கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் விதியின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிகிறது.
தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள், பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களது பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், இன்று மாலை 6 மணிக்குமேல் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பற்றி பேசக்கூடாது. தொலைக்காட்சி பேட்டியிலும் தேர்தல் பற்றி பேசக்கூடாது என தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யாபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாலை முதல் மேல் வாட்ஸ்அப் போன்ற சமூக தலைவதளங்களிலும் தேர்தல் பிரச்சாரம் குறித்த செய்திகள் யாரும் வெளியிடக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளார்.