வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் வழியாக வாக்களிக்கும் முறை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

Must read

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் வழியாக வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் ஓட்டுச்சாவடி அமைத்தும், ஓடிபி அல்லது மெயில், இணையதள லிங்க் அனுப்பி அவர்கள் வாக்களிக்க உதவலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந் நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம், ஆன்லைன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கும் முறையை பரிந்துரை செய்து சட்டத்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைன் முறையில் ஓட்டளிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடக்கும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article