சென்னை:

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்து செல்லும் பொதுமக்கள், வியா பாரிகள், வணிக நிறுவனங்கள், அதற்கான படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேற்று இரவு முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பல இடங்களில் சோதனை சாவடிகள், முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று இரவு  திருவாரூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல். செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில், கீழே காணும் வகையில், தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் உரிய ஆவணங்கள் குறித்து பதிவு செய்து எடுத்துச்சென்றால், உங்களுடைய உடமைகளை பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கலாம்..

மாதிரி படிவம்

மேலே காணுப்படும், மாதிரை படிவம் போன்று உங்களது நிறுவனத்தின் பெயர் அச்சிடப்ப்பட்டுள்ள  லெட்டர் பேடில், தாங்கள் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பொருள் குறித்து பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்பம் பெற்று எடுத்துச்சென்றால் சோதனையில் இருந்து  தப்பிக்கலாம்..

பணம் எடுத்துச் செல்லும் பொழுதும் எடுத்து வரும் பொழுதும் கொடுத்தனுப்பும் போதும் உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கவும்.  ஆவணங்கள் இல்லாமல் பணம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டாம்.. எடுத்து வர வேண்டாம்.. அனுப்ப வேண்டாம்…

இந்த தகவல்கள் அனைத்து வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில், எச்சரிக்கையாக மேற்கொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது.