அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயக கட்சி சார்பில் ரூபாய் 6 ஆயிரத்து 640 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் விமான பயணம், உணவுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் 101 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட வீண் செலவுகள் செய்ததாகவும், இதனால் கட்சிக்கு 168 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆடம்பர செலவே கமலாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரிஸுக்கே ரூ. 6640 கோடி செலவு என்றால் வெற்றிபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு மேலும் எத்தனை ஆயிரம் கோடிகள் செலவாகியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எலன் மஸ்க் போன்ற உலகின் முன்னணி பணக்காரர்கள் டொனால்ட் டிரம்ப் பின்னால் வரிசை கட்டி நின்றதுடன் மில்லியன் கணக்கான டாலர்களை தினமும் அள்ளிவீசிய இவர்களால் உலகில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.