திருச்சி: திருச்சியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில்  சாமி குப்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கினார். முதல்வர் பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி 2 நாள் தேர்தல் பிரசாரமாக திருச்சி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று  திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்  உள்பட பல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது,  அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் சதித்திட்டம் செய்கிறார் என்று ஆவேசமாக கூறிய எடப்பாடி,  கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். யாராலும் அதிமுக வை உடைக்க முடியாது. கட்சியை உடைக்க சதி செய்யலாம். ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற ஸ்டாலினின்  கனவு நிறைவேறாது என்று கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த , வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இன்று, திருச்சி மாவட்டம்,  முசிறி, கண்ணனூர் , துறையூர் மண்ணச்சநல்லூர் சமயபுரம் டோல்கேட் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். முன்னதாக  இன்று காலை திருச்சி அருகே உள்ள ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற முதல்வர் அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.