ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன.
ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொது நூலகங்களை வரும் ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் விவரங்கள்:
பகுதி நேர நூலகங்கள் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து நூல்நிலையங்களும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படும்.
அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நூலகங்கள் திறந்திருக்கும்.
கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனி நபர் இடைவெளியை கடை பிடிக்க வேண்டும்.
புத்தக வாசிப்பாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் நூலகத்துக்குள் செல்லும் முன்பாக ’’தெர்மல் ஸ்கிரினிங்’ செய்யப்படுவார்கள்.
65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 15 வயதுக்கு குறைவானோருக்கு அனுமதி இல்லை.
-பா.பாரதி.