மாஸ்கோ,
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த 3ந்தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபரின் மூத்த சகோதரர் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டார்
கடந்த 3ந்தேதி நடைபெற்ற பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த குண்டுவெடிப்பை ரஷ்ய குடியுரிமை பெற்ற கிர்கிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் குண்டுவெடிப்பு காரணமாக சந்தேகப்படும் நபரின் மூத்த சகோதரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுகுறித்து வீடியோவை தற்போது வெளியாகி உள்ளது.
புனித பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ குண்டுத் தாக்குதலுக்கு பின் சந்தேகிக்கப்படும் அமைப்பின் தலைவராக அகிராம் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, அவரது மூத்த சகோதரர் அக்ரம் அஸிமோவ் எனப்வரை ரஷ்யாவின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த குண்டு வெடிப்பு காரணமாக சந்தேகத்தின்பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டி ருந்தனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியாக இருந்ததாக அக்ரம் அஸிமோவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு நிதி உதவி அளித்ததாக ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட அசிமோவ், “பயங்கரவாத தாக்குதலுக்கு தயார் செய்ய பயன்படுத்தப்படும் நிதிகளின் பரிமாற்றத்துக்கு உதவியதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் தூதுவர்களோடு தொடர்பு உருவாக்க உதவியது தெரிய வந்துள்ளதாக எப்எஸ்பி தெரிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 3 இந்த குண்டுவெடிப்பில், தொடர்பு காரணமாக, அஸிமோவுடன் மேலும் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர்.
குண்டு வெடிப்புக்கு காரணமாக சந்தேகிக்கப்படும் அகிராம் என்பவரின் சகோதரர் அபோர் அஸிமோவ். கைது செய்யப்பட்ட அவரிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்த வீடியோ தற்போது பரபரப்பாகி வருகிறது.
1988 ஆம் ஆண்டில் பிறந்த அஸிமோவ், முதலில் மாஸ்கோவுக்கு வெளியே ஒடின்ஸ்கோவில் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீசஸ் (FSB) கூறியுள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த 3ந்தேதி இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.
[youtube https://www.youtube.com/watch?v=BuM3TN2tQL0]
video credit: www.rt.com