தாக்குதல் குறித்த செய்திகளை தேர்தல் ஆணையம் கவனித்து  வருகிறது : தேர்தல் ஆணையர்

மும்பை

ந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடக்கும் தாக்குதல் குறித்த செய்திகளை தேர்தல் ஆணைய்ம் கூர்ந்து கவனித்து வருகிறதாக தேர்தல் ஆணையர் அசோக் லவேசா தெரிவித்துள்ளார்

கடந்த 14 ஆம் தேதி புல்வாமா வில் நடந்த ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.    அதன் பிறகு இந்திய விமானப்படை தாக்குதலில் அந்த இயக்கத்தின் முகாம் கள் அழிக்கப்பட்டன.  நேற்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லை மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கச் சென்ற இந்திய விமானி ஒருவர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில தேர்தல் களம் குறித்து தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.   ஆய்வுக்கு பிறகு ஆணையர் அசோக் லவேசா செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவரிடம் இந்த தாக்குதல்களால் தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்தபடி தேர்தல் அட்டவணை வெளியாவது பாதிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆணையர் லவேசா, “தாக்குதல்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் வரும் செய்திகளை தேர்தல் ஆணையம் கூர்ந்து கவனித்து வருகிறது.   நாங்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய கடமைப்பட்டுள்ளோம். “ என தெரிவித்தார்.

மேலும் அவர், “மின்னணு வாக்கு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகைசீட்டு இயந்திரமும் இணைக்க பட உள்ளது.  வாக்கு ஒப்புகை சீட்டு என்பது ஒரு தனிப்பட்ட அச்சடிக்கும் இயந்திரமாகும்.   வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த கட்சி குறித்த விவரங்கள் இதில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2019 Lok Sabha elections, election commission, indo pak attack, keenly observing, இந்தியா பாக் தாக்குதல்கள், கூர்ந்து கவனிப்பு, தேர்தல் ஆணையர், மக்களவை தேர்தல் 2019
-=-