தலைமைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த சிவ்தாஸ் சிங்மீனா கட்டிட மனை ( ரியல் எஸ்டேட்) ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளர் ஆவார். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இரண்டாவது தமிழரும் முருகானந்தமே.
இந்த நிலையில், முதல்வரின் இணைச் செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமைச் செயலாளராக நியமிக்கபட்ட நிலையில், இணைச் செயலாளர் பதவி இடம் காலியாக இருந்தது. இதை அடுத்து தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, முதல்வரின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த இளம்பகவத் ஐஏஎஸ்ஸை தூத்துக்குடி ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது