சமீபத்தில் ஏலத்திற்கு வந்த உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடிதங்கள் சில, தன் கண்முன்னே விரிந்த பேரழிவைப் பற்றி அவர் எப்படி சிந்தித்தார் என்பதை தெரிவிக்கினறன.
ஏலத்திற்கு வந்த அவரின் பல கடிதங்களில், மொத்தம் 3 கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை. அக்கடிதங்கள் 1921 மற்றும் 1939ம் ஆண்டுகளுக்கு இடையே எழுதப்பட்டவை. அக்கடிதங்கள், ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சியையும் மற்றும் யூத எதிர்ப்பு சூழலையும் ஐன்ஸ்டீன் எப்படி பார்த்தார் என்பதைத் தெரிவிக்கின்றன.
கடந்த 1921ம் ஆண்டு, தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய மியூனிச் பயணத்தை, பாதுகாப்புக் கருதி ரத்து செய்துவிட்டதாக கூறியுள்ள அவர், மியூனிச் நகரில் பரவியிருந்த செமிட்டிக் எதிர்ப்பு மனோநிலையையும் குறிப்பிடுகிறார்.
அதேபோன்று, 1934ம் ஆண்டு தனது முதல் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், மகனைப் பராமரிப்பதற்கு பணம் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். தன்னை ஒரு மிதிமிஞ்சிய வகையில் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
– மதுரை மாயாண்டி