லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில் , எகிப்து, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 மருத்துவர்களின் மரணம் ஆரோக்கியத்தின் அசாதாரண நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறது.
பிரிட்டிஷ் மருத்துவர்கள் பெருமளவில் குறிப்பாக மருத்துவ துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டு மருத்துவர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் தான் 8 மருத்துவர்கள் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி இருக்கின்றனர். இறந்த ஒருவரான அடில் எல்தயார் என்பவரின் உறவினரும், மருத்துவருமான ஹிஷாம் எல்-கிதிர் கூறி இருப்பதாவது:
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அவர்கள் பிரெக்ஸிட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களை போன்ற குடியேறியவர்கள் நம் நாட்டிற்குள் வந்து தங்கள் வேலைகளை பறிப்பதாக நினைத்தனர்.
ஆனால் இப்போது, அதே குடியேறிகள்தான் உள்ளூர் மக்களுடன் இணைந்து மருத்துவ சேவயாற்ற முயற்சிக்கிறார்கள் என்றார். முன்னதாக கொரோனா வைரஸிலிருந்து பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் 7,097 பேர் இறந்து விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.