ஜெரூசிலம்:
ல்லூரியில் படிக்க வேண்டும் என்றால், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று எகிப்து சட்டவல்லுனர் எல்ஹாமி அஜினா  கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
download எகிப்தில் கடந்த மதம் சட்டவல்லுனர் எல்ஹாமி அஜினா, “எகிப்து இளைஞர்கள், செக்ஸ் விஷயத்தில் பெண்களை திருப்திபடுத்தும் அளவுக்கு இல்லை. அதனால் பெண்கள் வேறுவழிகளை தேர்வு செய்ய வேண்டும்” என்று அதிரடியாக பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இப்போது இன்னொரு அதிரடியை கிளப்பியிருக்கிறார்.
“கல்லூரிக்கு செல்ல விரும்பும் பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ சோதனை செய்யவேண்டும். இதன் மூலம் பெண்களின் கன்னித்தன்மையை நிரூபிப்பதுடன், பல வகைகளில் அது உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எகிப்து நாட்டு இளைஞர்களு்ம் அஜினாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.