சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஈஸ்வரன்.

அதில் சிம்பு பாம்பு பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. சிம்பு நிஜ பாம்பை பிடித்தார் என்று கூறி சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார் .

படத்தில் பயன்படுத்தப்பட்டது நிஜப் பாம்பு இல்லை என்று சுசீந்திரன் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்குமாறு வனத்துறை கேட்டது.

இதையடுத்து சுசீந்திரன் நேரில் ஆஜாராகி ஆதாரங்களை அளித்து விளக்கினார். படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என வனத்துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களை அளித்துள்ளார் சுசீந்திரன்.

சுசீந்திரன் அளித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாம்பு பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.