
சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
தீபாவளி நாளான இன்று அதிகாலை 4.32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் டீசர் வெளியாகும் என்று நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மிகக் குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு, டீசர் குறித்தான திடீர் அப்டேட் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.
தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரபரப்பான விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
[youtube-feed feed=1]