தர்மலிங்கம் கலையரசன் (Tharmalingam Kalaiyarasan) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து:

நாம் தமிழர் கட்சி (அல்லது DNA கட்சி) திரும்பவும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு பாடுபடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. கவுன்சிலர் முதல் அமைச்சர் வரையில் யார் வேண்டுமானாலும் இருக்கலாமாம். ஆனால் (தமிழ்நாடு) மாநிலத்தின் தலைவர் மட்டும் “தமிழராக” இருக்க வேண்டுமாம். அதாவது “பிறப்பால்” தமிழராக இருப்பவர் தான் ஆட்சி நடத்தலாம்.
அப்படியானால் “எல்லா” தமிழர்களுமே முதல்வராகிவிட முடியுமா?
தேர்தலில் போட்டியிடுவதென்றால் முதலில் இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டுமே? ஒரு ஈழத் தமிழர், என்ன தான் சீமானின் விசுவாசி, நாம் தமிழர் கொள்கைப் பரப்பாளர் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? அவர் ஒரு சுத்தத் தமிழர் என்று DNA டெஸ்ட் நிரூபித்தாலும் மாநிலத் தலைவராக முடியுமா?
தவிர, நாம்தமிழர் கட்சி, ஒரு விதியையே ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள், அகதிகள் எவரும் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர முடியாதாம். “இந்தியக் குடிமக்கள்” மட்டுமே உறுப்பினராகலாம் என்று கட்சி ஆவணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. (நாம் தமிழர் கட்சியின் அமைப்பு விதிகள், விதி 3, பிரிவு 1 )
தங்களது கட்சியிலேயே சேர்க்காதவர்கள், ஈழத் தமிழருக்காக என்ன செய்து கிழித்து விடுவார்கள்? இவர்களால் ஈழத் தமிழருக்கு என்ன நன்மை? எனக்குத் தெரிந்த வரையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் வெளிப்படையாக பாகுபாடு காட்டிய ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும் தான்!
ஒன்னுமே புரியலையே..!
Patrikai.com official YouTube Channel