டில்லி,

ஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா காந்தி கூறி உள்ளார்.

ராஜஸ்தானில் இதுகுறித்து கடந்த 2015ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால், தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான், ராஜஸ்தான் ஒரு நல்ல காரியத்தை செய்திருந்தது. இதை நான் வரவேற்கிறேன்.

அதுபோல, அரியானா மாநிலத்திலும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்றும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி 8ம் வகுப்பு என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் வேட்பாளர்கள் தங்கள் வீடுகளில் ஒரு கழிப்பறை கட்டாயமாக கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு,  பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் குறைந்த பட்ச கல்வித்தகுதி குறித்து நிர்ணயம் செய்யும்படி கடிதம் எழுத இருப்பதாக கூறினார்.