a
அரசியல் கட்சிகள் சில அழைப்பு விடுத்தும் ஏற்காத நடிகர் கஞ்சா கருப்பு,
திருச்செங்கோடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இடையில் பத்திரிகையாளர்களிடம் கஞ்சா கருப்பு பேசியதாவது..
“சில அரசியல் கட்சிகள் என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தனர். ஆனால் மறுத்துவிட்டேன். இவங்களை பற்றி பேசுவதா?, அவங்களை பத்தி பேசுவதான்னு யோசிச்சே நம்ம புத்தி மழுங்கி விடும்.
என்னிடம் மேனேஜராக பணியாற்றியவர் 3 ½கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டார்.  அதே போல,  படம் எடுப்பதாக  வந்த ஒருவர் என்னை இரண்டரை கோடி ரூபாய் கடனாளியாக்கினார். இப்படி நான் ஏமாந்ததற்குக் காரணம், கல்வி அறிவு இல்லாததுதான்.
ஆகவே அனைவருக்கும் கல்வி அறிவு அளிக்க வேண்டும என்பதே என் கொள்கை.
எனக்கு சில கட்சிகள் அழைப்பு விடுத்தன. நான் மறுத்துவிட்டேன்.
நான்கு நாட்கள் முதல்– அமைச்சர் பதவியை என்னிடம் தரும் கட்சியில்தான்  சேருவேன். முதல்வரானால் நதிகளை இணைப்பேன், கல்வி,  மருத்துவம், முழுவதும் இலவசமாக்குவேன். அதே போல  தமிழகம் முழுதும் பேருந்து பயணத்தை இலவசம் ஆக்குவேன்” என்று பேசினார்.