சென்னை:  மத்தியஅரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய,  ரூ.2152 கோடி நிதியை  வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

அதுபோல மொழிக்கொள்கை குறித்து விவாதிக்கவும், மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான்மீதும் உரிமை மீறல் நோட்டீசும்   அளித்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் பிரதான் தரக்குறைவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக எம்.பி.க்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார் பின்னர்,   அதை அமைச்சர் வாபஸ் பெற்ற நிலையில், அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மொழி கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர்  கனிமொழி எம்.பி., நோட்டீஸ் வழங்கியுள்ளார். தமிழர்களை அவமரியாதையாகப் பேசிய தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அத்துடன், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய,  ரூ.2152 கோடி நிதியை  வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

“நிதியை விடுவிக்க புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கின்றனர்” என்றும்,   கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மத்திள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இதனால்  மத்திய -மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை குறித்து திமுக எம்.பி.க்கள் -ஒன்றிய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது. ஒன்றிய தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மேலும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். இந்த நிலையில், மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார்.

[youtube-feed feed=1]