தேனி,

சிகலா தயவால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்து. கூவத்தூருக்கு  சசிகலா வராமல் இருந்திருந்தால் இந்த ஆட்சி அமைந்திருக்காது என்று காட்டமாக கூறினார் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான  தங்கதமிழ்செல்வன்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு விழாவில், தொகுதிஎம்எல்ஏவான தங்கத்தமிழ்செல்வன் கலந்துகொண்டு  நலத்திட்ட உதவிகைள வழங்கி பேசினார்.

அப்போது, தற்போது அதிமுகவில் நிலவும் குழப்பம் குறித்தும், தினகரன் முதல்வர் மற்றும் அமைச்சர்களால் ஒதுக்கப்படுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், எடப்பாடி முதல்வர் பதவியில் அமர சசிகலாதான் காரணம் என்றும், அவரது தயவால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது என்றார்.

மேலும் சசிகலா 2 நாட்கள்  கூவத்தூரில் தங்கியிருந்து அ.திமு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ. க்களுடன் பேசி, அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும், கட்சி உடைந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.

தான் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்ட போதும் கூட ஜெயலலிதாவின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் சசிகலா தெரிவித்ததாக கூறினார்.

சசிகலா கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் பேசி முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால் தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து இருக்காது என்றும் கூறினார்.

தங்கத்தமிழ்செல்வன் பேசியது குறித்து பார்க்கும்போது, சசிகலா அதிமுக எம்எல்ஏக்களுடன் கூவத்தூரில் பேசியது ,  பண பேரம் குறித்துதான் என்பது தெளிவாகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்….