
‘ருத்ரன்’ படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் உள்ளார் பைவ் ஸ்டார் கதிரேசன்.
இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் இணைந்த செய்தி கடந்த வாரம் வெளியானது.
ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எடிட்டர் ஆண்டனி ருத்ரன் படத்தில் இணைந்துள்ளார். இவர் கடைசியாக காப்பான், புத்தம் புது காலை ஆந்தாலஜி போன்ற படங்களில் பணியாற்றினார்.
[youtube-feed feed=1]We now have the proficient @editoranthony onboard for #Rudhran. Welcome sir!#ருத்ரன் @offl_Lawrence @5starcreationss @5starkathir @priya_Bshankar #PoornimaBhagyaraj @RDRajasekar @gvprakash @5starcreationss @venkatjashu @tuneyjohn @teamaimpr pic.twitter.com/TJDQ98TnFl
— Team AIM (@teamaimpr) February 11, 2021