ரவுடி கூட்டத்தில் சிக்கி கொலை கொள்ளையில் ஈடுபட்ட ஒருவன் அந்த கூட்டத்திலிருந்து வெளிவர முடியாமலும் பணத் தேவைக்காகவும் செய்யும் சட்ட விரோத செயல் ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது. அவனது மனைவி நிலை என்ன என்பதை யதார்த்தமாக விளக்குகிறது ’எது தேவையோ அது தர்மம்’ என்ற குறும்படம்.
வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பங்கேற்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறது. இப்படத்தை து.ப.சரவணன் இயக்க, ஸ்ரீனி, ஷீலா, வினோத் ராஜேந்திரன் நடித்திருக்கின்றனர்.
இதன் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகியிருக்கிறது. வரும் 10ம் தேதி குறும்படம் ரிலீஸ் ஆகிறது.