சென்னை: மறைந்த முதன் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதா பிறந்தநாளன்று., அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ள எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி அதிமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்,  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியலில் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க., என நான்கு அணிகள் உள்ளன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புதியபாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதாதளம் செக்யூலர் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக  உள்பட சில கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் புதிய தமிழகம், தேமுதிக கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு போத அதிமுக தரப்பில் 164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில்போது, பாஜக இல்லாத கூட்டணியில் அதிமுக தரப்பில்   179 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இத்தேர்தலில், பாஜக, அமமுக கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால்,  குறைந்த அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது. அதன்படி, அதிமுக தரப்பில்  164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே  எம்.ஜி.ஆர்., பிறந்தநாளான ஜன.,17ல் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில்,  கடந்த வாரம் இரண்டு கட்ட தேர்தல் அறிகையையும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 24ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]