சேலம்: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் திகிலில் காணப்படுகின்றனர். இந்த நிலையில், சேலம் ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்து, நாளை (ஜூன் 4ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல்வாதிகள் பலர் தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம். ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோயில் உள்ளது. இங்கு, உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றி வந்த எடப்பாடி பழனிசாமி கருவறையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் முத்துமலை முருகனை தரிசனம் செய்தார். பின்னர் வேலுடன் சன்னதியை சுற்றி வந்தார். அதனையடுத்து தியான மைய இடத்தில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அ