மதுரை:

டப்பாடி தலைமையிலான அதிமுகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணையும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்து உள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலுக்கு வருகை தந்த மதுரை ஆதீனம், அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம்,

நாடாளுமன்ற  தேர்தல் முடிவடைந்ததும், விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவார்கள்… இது  உறுதி என்றும்  தெரிவித்தார்.  நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றவர்,  தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். என்றவர், தன்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறினார்.

டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டிய மதுரை ஆதீனம்…  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார் என்றும்,  அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  புதிய தகவலை தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்தில் இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.