சென்னை: கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். இது சரியா என சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகிறது. சபை தொடங்கியதும் முதலில் நடைபெறும் நிகழ்ச்சியான கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை ஏற்க திமுக அரசும், சபாநாயகர் அப்பாவும் மறுத்து வருகின்றனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடுவதால், இன்று 3வது நாளாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இந்த தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அவைக்கு வெளியே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித் அதிமு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என செயல்படுகின்றனர். கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார் என்றவர், கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது? என கடுமையாக சாடினார்.
சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்? என கேள்வி எழுப்பயி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமசட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்? கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்பதால் கவர்னரிடம் மனு அளித்தோம் என்றவர், சபையில் சபாநாயகர் அரசியல் பேசுகிறார், ஆனால் எங்களுக்கு சட்டசபையில் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான். ஆனால், வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள் என கூறினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றவர், தற்போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்றும் சாடினார்.