சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவ கடிதத்தை கொடுத்தார்.

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ஏற்கும் தகுதியை இழந்தார். இதையடுத்து கூவாத்தூரில் நடந்த எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த கடிதம் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து தன்னை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் நேரம் கொடுத்தார்.

இதையடுத்து எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் இன்று மாலை கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் சரோஜா, தளவாய்சுந்தரம், டிடிவி தினகரன் உள்பட 12 பேர் உடன் சென்றனர்.

தனக்கு ஆதரவளிக்கும் 126 எம்எல்ஏ.க்கள் பட்டியலை எடப்பாடி கவர்னரிடம் வழங்கினார். தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பட்டியலை பெற்றுக் கொண்ட கவர்னர் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது