சென்னை:

க்கள் நல திட்டங்களை கொண்டு வருவதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் தற்போதைய தமிழக முதல்வர்  எடப்பாடி திகழ்வதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

தமிழக சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று கூட்டத்தில்  எரிசக்தி மற்றும் மதுவிலக்கு துறை சம்பந்தமாக விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று மீன்வளம் மற்றும் பால்வளம் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்  என்று கூறினார்.

அமைச்சரின் பேச்சு அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.