மதுரை:
எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஊழல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தியதுடன், கத்திரிக்காய் முத்தினால் கடைத் தெருவுக்கு வந்துதானே தீர வேண்டும் என்று தெரிவித்தார். குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றவர், எடப்பாடி தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல், அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றவர்,. இருமொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பாகவும் கூறினார்.
[youtube-feed feed=1]