நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபட்தேஹி மற்றும் லீனா மரியா பால் உள்ளிட்ட பலருடன் உல்லாச வாழ்வை அனுபவிக்க கோடிக்கணக்கில் செலவு செய்து மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தது கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகை லீனா மரியா பால் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாக்குலினுக்கு 52 லட்ச ரூபாய் மதிப்புள்ள குதிரை, 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பெர்சிய பூனை மட்டுமல்லாமல் 7 கோடி ரூபாய்க்கு தங்க வைர நகைகளையும் வாங்கி கொடுத்திருக்கிறார்.

உலகின் முன்னணி நிறுவனங்களான ஹெர்ம்ஸ் பிரேஸ்லெட்ஸ், பிர்கின் ஹாண்ட்பாக், லூயி வுய்ட்டோன் காலணிகள் மட்டுமன்றி ஜிம்மில் அணிந்துகொள்ள Gucci உள்ளாடைகளையும் ஜாக்குலினுக்காக வாங்கி கொடுத்திருக்கிறார் சுகேஷ்.

இதுகுறித்து நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

நோரா – ஜாக்குலின்

இந்த விசாரணையின் போது சுகேஷ் வாங்கிக்கொடுத்த பொருளை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க இருவரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் மற்றும் வழக்கு தொடர்புடைய மேலும் சிலரை விசாரிக்கவும் கைது செய்யவும் வேண்டியுள்ளதால் இந்த பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்வது தாமதாவதாக கூறப்படுகிறது.

நோரா-வுக்கு சுகேஷ் பி.எம்.டபுள்யூ. கார் வாங்கி கொடுத்ததாக கூறியிருக்கும் நிலையில், இவை அனைத்தும் அடுத்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.