சென்னை:  சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக  திமுக எம்.பி.யான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட  குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்ட நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது திமுகவினரிடையே  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரவுண்டு கட்டி ரெய்டுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக திமுக பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான மத்தியஅரசு அதிகாரிகள் சோதனைளை நடத்தி வருகின்றன. ஏற்கனவே பல அமைச்சர்களுக்கு சொந்த இடங்களில் சோதனைகள் நடைபெற்ற நிலையில், முதன்முதலாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை பல முறை ரெய்டு நடத்தி ஏராளமான ஆவங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, கனிம வள அலுவலகங்கள், மணல் குவாரிகள் என பல இடங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 5 மாதங்களை கடந்தும் இன்றும் சிறைக்கைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின் மகனும், திமுக எம்.பி.யுமான  கதிர் ஆனந்துக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால்,  அவர்  கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

ஏற்கனவே  சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது,  திமுக மூத்த அமைச்சரும், பொதுச்செயலாளருமான துரைமுருகனின் வீடு மற்றும் அலுவலகங்கள், மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்திற்கு சொந்தமான இடங்கள், தோட்டங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.11.55 கோடியை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த அமலாக்கத்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.  இதனால் அமைச்சர் துரைமுருகன் உள்பட அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: காவல்துறையின் எப்ஐஆரில் தகவல்….