சென்னை

மலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ.42 கோடி பதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது.

 

இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அமலாக்கத்துறை தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

அந்த அறிவிப்பில்,

”அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது  அவருக்குச் சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது ரூ.81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டுப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.41.9 கோடி நிரந்த வைப்புத்தொகை, ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது”.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.