டில்லி

மலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர்.

டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

டில்லியில் இன்று மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர். சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் சிங் எம்.பி.யை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே டில்லி அரசின் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.