சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10.5 கி.மீ. தூர சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
90 அடி கொண்ட இந்த சாலையை 104 அடியாக அகலப்படுத்தவும் இதனை 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வரும் இந்த சாலை விரிவாக்கப்பணி தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் அந்த சாலையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி தங்ககடற்கரையின் மதில் சுவர் இடிக்கும் பணி இன்று நடைபெற்றது.
உரிய நோட்டீஸ் அனுப்பியும் அந்நிறுவனம் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறையினர் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு அவற்றை அகற்றினர்.
[youtube-feed feed=1]ECRல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கி.மீ. உயர்மட்ட சாலை திட்டம்…