நீலகிரி:

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ், சயான் ஆகியோருக்கு நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த  2017 ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சமீபத்தில்,  கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர் பாக தெகல்கா இணையதளத்தின் முன்னாள்  ஆசிரியர் மேத்யு சாமுவேல் என்பவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அதில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக ஜாமின் விடுதலை செய்யப்பட்ட மனோஜ், சயான் உள்பட 4 பேர்  உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட  4 பேருக்கு மாவட்ட நீதிபதி வடமலை பிடியாணை பிறப்பித்தார்.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிஜின் மற்றும் தீபு ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், மனோனஜ், சயன் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் மனோஜ் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததாக கூறப்படுகிறது.