சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்புக்காக  ஆயிரக்கணக்கான முகாம்கள் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு உள்ளன.  இதுவரை சென்னை யிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.

தொடர் மழை மற்றும்  செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்,  கரையோர மக்கள் தங்குவதற்காக சென்னை  மாநகராட்சி அமைத்துள்ள 1516 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி,  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டலங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில், பர்மா காலணி, ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை உள்பட  ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய மக்கள் அனைவரையும், அழைத்து  தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.   அதன்படி சுமார்  சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  இவர்களில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.