சென்னை: தமிழ்நாட்டில் தாம்பரம்  புதிய மாநகராட்சியாக தொடங்கப்பட்ட  நிலையில், அதனுடன் இணைக்கப்பட உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வந்த நகராட்சி ஆணையர்கள் உள்பட 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  தாம்பம் மாநகராட்சியுடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும், கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைகிறது. இதன் காரணமாக, இந்த பகுதிகளில் உள்ள நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி ஆணையர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் பணி விதிகள் விதி 7 மற்றும் தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் கீழ்நிலைப் பணி விதிகள் விதி 9 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிர்வாகக் காரணங்களுக்காக,தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் உடனடியாக அமலுக்கு வரும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

எஸ்.ராமமூர்த்தி (கமிஷனர், கரூர்) – என்.விஸ்வநாதன் அவர்களுக்கு பதிலாக மாநகராட்சி துணை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம்,கோவைக்கு இடமாற்றம்.

எம்.காந்திராஜ் (நகராட்சி ஆணையர், பல்லலாவரம், சென்னை) – டிஎம்டி.ஆர்.சரஸ்வதிக்கு பதிலாக உதகமண்டலம் நகராட்சிக்கு இடமாற்றம்.

எஸ்.லட்சுமி (நகராட்சி ஆணையர், காஞ்சிபுரம்) – ஓ.ராஜாராக்கு பதிலாக நகராட்சி ஆணையர், மறைமலைநகருக்கு இடமாற்றம்.

ஓ.ராஜாராம் (நகராட்சி ஆணையர், மறைமலைநகர், சென்னை) – பி.கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக கோவில்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம்).

ஆர்.சந்திரா – ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணிநியமனம்.

பி.ஏகராஜ் (நகராட்சி ஆணையர், திருப்பத்தூர்) – கே.ஜெயராமராஜாக்கு பதிலாக ராணிப்பேட்டை பேரூராட்சிக்கு இடமாற்றம்).

பி.சத்தியநாதன் (நகராட்சி ஆணையர், வாணியம்பாடி) – உடுமலைப்பேட்டை பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.

கே.ஜெயராமராஜா (நகராட்சி ஆணையர், ராணிப்பேட்டை) – பி.ஏகராஜ்  இடத்தில் திருப்பத்தூர் நகராட்சிக்கு இடமாற்றம்.

இ.திருநாவுக்கரசு (நகராட்சி ஆணையர், எடப்பாடி) – குடியாத்தம் பேரூராட்சியில் தற்போது காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்.

ஆர்.ரவிச்சந்திரன் (நகராட்சி ஆணையர், திருத்தங்கல்) – கடையநல்லூர் பேரூராட்சியில் காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்.

எம்.முத்துக்குமார் (நகராட்சி ஆணையர், காங்கேயம்) – திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.