இஸ்லாமாபாத்:

நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து  கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை (பொறுப்பு) பாகிஸ்தான் தற்காலிக வெளியுறவு செயலாளர் நேரில் வரவழைத்து அரசின் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

அப்போது, பாகிஸ்தானின் பிராந்திய இறையாண்மையை மீறி, பாகிஸ்தானுக்குள் இந்திய விமானங்கள் ஊடுருவியது கண்டனத்துக்குரியது என்றும், இந்தியாவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் தாங்களே முடிவு செய்வோம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தாக்குதல் நடத்துவதாக கூறுவது, இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவும் என்றவர்,  பயங்கரவாத முகாம்களை அழித்ததாக ஆதாரமற்ற செய்தியை  பரப்புவதாகவும் அவர் கூறினார்.