சென்னை: நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை எதிரொலி மற்றும் சென்னை மாநகராட்சியின் கிடுக்கிபிடி காரணமாக, ராகவேந்திரா மண்டபத்துக்கான சொத்து வரி ரூ.6.50 லட்சத்தை நடிகர் ரஜினிகாந்த் செலுத்தியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரியை கட்டமுடியாது, வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி உயர்நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும், நீதிமன்றமும் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வழக்கை வாபஸ் வாங்கினார். இதையடுத்து, ரஜினி இன்று இரவுக்குள் (15ந்தேதி) வரியை செலுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று காலை வெளியிட்டுள்ள பதிவிட்டில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம்.. அனுபவமே பாடம் என புலம்பியருந்தது குறிப்பிடத்தக்கது.