புதுடெல்லி:
ராணுவத்தை அவமதித்த உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் காதல் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சூரஜ்வாலா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை விமர்சித்த நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தேர்தல் நடத்தை விதியை மீறிவிட்டார் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், எதிர்காலத்தில் இதுபோல் நடந்துகொள்ளக் கூடாது என கூறி பிரச்சினையை முடித்துவிட்டது.
இந்திய ராணுவம் மோடியின் ராணுவம் என்று பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக புகார் கொடுத்தோம். அவரிடமும் மென்மையான போக்கை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறது.
அவரிடம் விளக்கம் கேட்டு காதல் கடிதம் அனுப்புகிறது இந்திய தேர்தல் ஆணையம் என்று குறிப்பிட்டுள்ளார்.