டில்லி

பி எம் நரேந்திர மோடி என்னும் பயோ பிக் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

பி எம் நரேந்திர மோடி என்னும் பெயரில் மோடியின் கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மோடியாக விவேக் ஒபராய் நடித்துள்ளார். ஒமங் குமார் இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த திரைப்படம் இப்போது வெளியிடுவதை தடைசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இந்த படம் திரையிடப்பட்டால் அது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாகும். இந்த திரைப்படத்தில் பிரதமர் மோடியின் சாதனைகள் என்னும் பெயரில் தேர்தல் பிரசார காட்சிகள் இடம்பெறலாம் எனவும் அது தேர்தல் விதிகளை மூறியதாகும் என எதிர்க்கட்சிகள் விவரித்துளன.

இந்நிலையில் டில்லி தலமை தேர்தல் அலுவலர் ரன்பிர் சிங் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அவர், “தேர்தல் விதி முறைப்படி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற விளம்பரங்கள் மட்டுமே சமூக வலை தளங்களில் வெளியிட வேண்டும். ஏற்கனவே தணிக்கை ஒப்புதல் பெறப்பட்டவைகளும் தற்போது தேர்தல் ஆணைய ஒப்புதலையும் பெற வேண்டும்.

எனவே இந்த திரைப்படம் தற்போது வெளியாவதில் சர்ச்சை உள்ளது. எனவே இது குறித்து இந்த திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டிச் அனுப்ப பட்டுளது. வரும் 30ஆம் தேதிக்குள் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என நோட்டிசில் குறிப்பிடப் பட்டுள்ள்து” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த திரைப்படம் அரசியல் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் மோடியின் தேர்தல் பிரசாரமாகவே அமைய உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இந்த திரைப்பட வெளியிட்ட்டை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க வேனும். இந்த திரைப்படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும், மோடியாக நடிக்கும் விவேக் ஓபராயும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.

 

[youtube https://www.youtube.com/watch?v=X6sjQG6lp8s]