பாஜ வேட்பாளர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

பெங்களூரு:

ர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பெங்களூருவில் பாஜக வேட்பாளருக்கு சொந்த வீட்டில் இருந்து  10ஆயிரம் அளவிலான வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால், பாரதியஜனதா கட்சியோ,  ராஜஜேஸ்வரி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளது.

ஆனால், பாரதியஜனதாவே, இது காங்கிரசின் நாடகம் என்றும், போலியான ஆதாரங்களை கொண்டு தோல்வி பயத்தில் காங்கிரஸ் குற்றம் சாட்டுவதாக கூறி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்ட பாஜ வேட்பாளருக்கு சொந்தமான வீடு

ஆனால், தேர்தல் ஆணையாளர் சஞ்சீவ் குமார், கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் ஒரிஜினல் என்றும், வாக்காளர் பதிவு செய்யும் 6ஏ பாரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவது குறித்து 24 மணி நேரத்திற்குள் தெரிவிப்பதாகவும்  கூறி உள்ளார்.

மேலும் தேர்தல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்த குடியிருப்பு மஞ்சுளா நஞ்சமாரி என்பவருக்கு சொந்தமானது என்றும், தற்போது ராகேஷ் என்பவர் அங்கு வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முனிரத்னா குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளது.

ராஜராஜேஸ்வரி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக முனிரத்னா கவுடா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பாஜ வேட்பாளர் முனிரத்னா (ஜீன்ஸ் போட்டிருப்பவர்) மீது நடவடிக்கை எடுக்க கோரும் காங்கிரஸ் பிரமுகர்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், இது பாரதிய ஜனதாவின் சதி என்றும், தேர்தலில் வெற்றி பெற  பாரதிய ஜனதா தீட்டிய சதி திட்டத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி இருப்பதாகவும், இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எதிராக உயர் மட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்,அவர்கள் மீது முதல்தகவல் அறிக்கை செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  வலியுறுத்தி  உள்ளது.

ரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி சட்ட மன்ற தொகுதியில் பாஜ வேட்பாளருக்கு கு சொந்தமான ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ  அடுக்குமாடி குடியிருப்பின் 115வது எண் உள்ள குடியிருப்பில்  ரெய்டின்போது 9,476 வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது, அவைகள் உண்மையான வாக்காளர் அட்டைகள், அவைகள் கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெற உள்ள இந்த ராஜராஜேஸ்வரி நகர் சட்டமன்ற  தொகுதியில்,  4,71,459 வாக்காளர்கள்  இருப்பதாகவும், இது அந்த பகுதி மக்கள் தொகையில் 75.43 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடம் மட்டும் 44,857 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.